ஜம்மு, ஏப். 14-
ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள பதற்றமான சூழலை தடுக்க இணைய சேவைகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா பகுதியில் செவ்வாயன்று பெண்ணை பாலியல் பலாத்கார செய்ய முயன்ற பாதுகாப்பு வீரருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்பு படை வீரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதனன்று அப்பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க மாநில காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும் சேர்ந்து தடியடி நடத்தினர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதில் ஒரு குண்டு ஜெகாங்கீர் அகமது என்ற வாலிபர் தலையில் பாய்ந்தது. இதில் காயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மொபைல் மற்று இணைய தள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொபைல் சேவை நிறுவனங்கள் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. சமூக விரோத சக்திகள் வதந்திகளை பரப்புவதை தடுக்கவே சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.