நாக்பூர், ஏப்ரல் 14-
மகாராஷ்டிராவில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்ணையா குமார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கர் பிறந்த நாள் விழா தொடர்பாக நாக்பூர் தான்வாடே கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்கக் கண்ணையா சென்றார். இந்நேரத்தில் விழாவுக்குச் செல்லும் வழியில் பஜ்ரங்தள் தொண்டர்கள் காரை மறித்துக் கற்களை வீசினர். தொடர்ந்து அவர் விழா மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு காலணி (ஷூ) வீசப்பட்டது. ஆனால் அது அவர் மீது படவில்லை. இதனால் இந்தக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். காலணியை வீசியவரை கூட்டத்தினர் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.  விசாரணையில் அவர் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த ஹரிதாஸ் ஷெண்டே என தெரிய வந்தது. ஏற்கனவே பாட்டியாலா நீதிமன்றத்தில் கண்ணையா குமார் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: