cpi-mutrharasan-facebook
மதுரை, ஏப்.13-
அதிமுவில் இணைந்த திருவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்னு பாண்டியனை மக்கள் தண்டிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கூறியுள்ளார்.
கடந்த 2011- ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவில்லிபுத்தூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பொன்னுபாண்டியன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஆர்.முத்தரசன் முகநூலில் செய்துள்ள பதிவு:-
ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொன்னுபாண்டியன் மீது தொடர்ந்து கடுமையான புகார்கள் கட்சித் தலைமைக்கு வந்துள்ளன. இதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள இருந்த நிலையில் அவர் கடந்த (09.04.2016) அன்று அஇஅதிமுகவில் சேர்ந்துள்ளார். ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் இத்தகையவர்களுக்கு பொருத்தமான இடமாக அஇஅதிமுக விளங்குவது வியப்பளிக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த தொகுதி மக்களுக்கும். கட்சிக்கும், நம்பகத்தன்மைக்கும் துரோகம் செய்த இவரை மக்கள் தண்டிப்பார்கள் என பதிவு செய்துள்ளார்.

free wordpress themes

Leave A Reply