லக்னோ, ஏப்.13-
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த  தேசிய புலனாய்வு அதிகாரியின் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் சகஸ்பூரைச் சேர்ந்த தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரி தன்சில் அகமது. அவர் ஏப்ரல் மாத துவக்கத்தில் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவரது மனைவி பர்ஷானா கதூன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பர்ஷானா கதூன் உயிரிழந்ததாக புதனன்று உத்தரபிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த தன்சில் அகமது பதான் கோட் விமானப்படைத் தள தாக்குதல் குறித்த வழக்கு விசாரணை குழுவில் இடம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: