சண்டிகர், ஏப்ரல் 13-
தண்ணீர் பாட்டிலை கூடுதல் விலை வைத்து விற்ற பிரபல முன்னணி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையிட்டிருக்கிறது.
சண்டிகர் மாநிலத்தில் ஜக்வர்சிங் என்பவர் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து புருக்கின் சென்ரல் என்ற பிரபல உணவகத்திற்கு சென்று சாப்பிட்டிருக்கின்றனர். சாப்பிட்ட பின்னர் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் ஜக்வார் சிங்க வாங்கியிருக்கிறார். அப்போது இரண்டு தண்ணீர் பாட்டிலுக்கான விலையாக ரூ. 312க்கு பில் தந்திருக்கின்றனர். இதைகண்டு அதிர்ச்சியடைந்த ஜக்வர்சிங் பாட்டிலில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த விலையை பார்த்திருக்கிறார். அதில் ரூ. 60 என அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து உணவகத்தினரிடம் ரூ. 60 விலை இருக்கும் போது, ஏன் ரூ. 312 என பில் தருகிறீர்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு வாட்வரி, சேவை வரி எல்லாம் சேர்த்தால் ரூ. 312 என விளக்கம் சொல்லி மிரட்டி அனுப்பியிருக்கின்றனர்.
இதையடுத்து ஜக்வர்சிங் அங்கிருக்கும் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர்  நீதிமன்றம் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த புருக்கின் சென்ரல் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது. அதன்படி சம்மந்தப்பட்ட நபருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ 15 ஆயிரம் செலுத்த வேண்டும். வழக்குக்கான கட்டணத் தொகையாக ரூ 5 ஆயிரமும், மேலும் நுகர்வோர் சட்ட உதவிக்கணக்கில் ரூ 15 ஆயிரமும் செலுத் வேண்டும் என உத்தரவிட்டது

Leave A Reply