காந்தி நகர், ஏப்ரல் 13-
குஜராத் மாநிலத்தில் தனியர் மின்நிறுவனங்களுடன் இணைந்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணம் நிர்ணயத்தின் போது முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஆம்ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியிருக்கிறது. மேலும் இந்த முறைகேட்டை கண்டறிய தனியார் மின் நிறுவனத்தின் கணக்குகளை  இந்திய தலைமை கணக்குத் தணிக்கைகுழுவின் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத்தில் தனியார் மின்நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மக்கள் நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து கட்டணம் நிர்ணயம் இருந்து வருகிறது. மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்திக்கு பயன்படும் டீசல்  நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் விலை சர்வதேச அளவில் குறைந்திருந்த போதிலும், நுகர்வோருக்கான மின்கண்டனம் குறைக்கப்படவில்லை. மாறாக மின்கட்டணத்தை உயர்த்தினர். அதோடு மட்டுமின்றி குஜராத் அரசு தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு 5 வருடங்களுக்கு முன்செலுத்திய பில்களுக்கு வரியையும் சேர்த்து டோரன்ட் மின் நிறுவனம் வசூலித்து கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும் டோரன்ட் நிறுவனம் இழப்பை சந்தித்தாக கூறி மின் கொள்முதல் ஒப்பந்ததில் கடந்த 5 ஆண்டுகளில் 280 சதவிதிம் விலையை உயர்தியிருக்கிறது. இந்த உயர்வு முழுவதும் மக்கள் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல இந்த டோரன்ட் நிறுவனம் குஜராத் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தனிப்பட்ட முறையில் அதிக நன்கொடை வழங்கியிருக்கிறது. இதன் காரணமாகவே பாஜகவும், காங்கிரசும் இந்த நிறுவனத்தின் பகல்கொள்ளையை கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக பா.ஜ.க விற்கு ரூ.35 கோடியும், காங்கிரஸ் கட்சிக்க ரூ 20 கோடியும் அளித்திருக்கிறது. இந்த விபரங்கள் எல்லாம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர்கள் வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர். எனவே டோரன்ட் நிறுவனத்தின் மின் கொள்முதல் ஊழல் தொடர்பாக அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை சிஏஜி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி குஜராத் பாஜக அரசின் மின் கொள்முதல் முறைகேட்டை கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டோரன்ட் நிறுவனம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கணக்கு வழக்குகளை சிஏஜியின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதிக கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருசக்க வாகன ( பைக் ) பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பாஜக அரசிற்கெதிரான அதிருப்தியும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.4

Leave a Reply

You must be logged in to post a comment.