புவனேஷ்வர், ஏப்ரல் 13-
ஒரிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. இவ்வெப்பத்தினால் இது வரை 24 பேர் பலியாகி உள்ளனர்.
நேற்று (செவ்வாய் கிழமை) 19 பகுதிகளில் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அதிக பட்சமாக டிட்டில்லாகார்க் நகரத்தில் 44.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. மேலும் அம்மாநில தலைநகரத்தில் 42.9 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
இந்த வெப்பத்தினால் முதலைமைச்சர் , மாவட்ட ஆட்சியர்  மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் இருக்கும் குறை தீர்க்கும் மையத்தை மூடச்சொல்லி மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: