ஸ்ரீநகர், ஏப்.12-
காஷ்மீர் மாநிலத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கழிவறை அருகே பெண் ஒருவரிடம் ராணுவ வீரர் தவறாக நடக்க முயன்றுள்ளார். தகவலறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். kashmirபோராட்டக்காரர்களை ஒடுக்க முயன்ற பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: