இந்தூர், ஏப்ரல் 11-
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளி , கல்லூரிகள் ஒவ்வொருன்றும் தங்கள் கல்விநிலையங்களில் இருந்து  100 மாணவர்களை அனுப்ப வேண்டும் மத்திய பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வரும் வியாழன் (14.04.2016) அண்ணல் அம்பேத்கார் 125-வது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டப் பேரணி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். ஆனால்இப்பேரணி நடைபெறும் இடம் இந்தூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கிறது.  இந்த பொதுக்கூட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை தலா நூறு பேர் வீதம் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு தேவையான வாகனம் உள்ளிட்ட ஏற்பாடுகளை பள்ளி மற்றும் கல்லூரிகள் தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த மாணவர்கள் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்கள் உதவி செய்பவர்களாக பயன்படுத்தப்படுவார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்துதல், பேரணியில் பங்கேற்கும் பாஜக தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு உள்ளிட்ட வினியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தபடுவார்கள் என அரசு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வரும் வேலையில் பாஜக தொண்டர்களுக்கு சேவகம் செய்ய ஏன் மாணவர்களை பயன்படுத்த வேண்டும். மாநில அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. இது சர்வாதிகார அரசு போல் செயல்படுகிறது. மாணவர்களை அரசியல் ஆதாயத்திற்காக ஒரு அரசே பயன்படுத்துவது கண்டனத்திற்கு உரியது ஆகும் என்று தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்தியப் பிரதேசப் பாஜக தலைவர் நந்த குமார் சவுகான் கூறும்போது, “இது வெறும் பரிந்துரை மட்டுமே, கட்டாய உத்தரவு எதுவும் இல்லை. இதில் தவறு இருக்கலாம், ஆனால், சர்ச்சையாக்குவதற்கு ஒன்றும் இல்லை”  என தெரிவித்துள்ளார்.hqdefault

Leave a Reply

You must be logged in to post a comment.