கொல்கத்தா, ஏப்.11-
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்கு மையம் அமைந்துள்ள பகுதிகளில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் 6 கட்டங்களாக சட்ட மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று 31 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடை பெற்றது. வாக்குபதிவின்போது அசன்சால் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு சென்றுள்ளனர்.
மேலும் ஜமுரியா சட்டசபைத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூத் ஏஜெண்டை கடுமையாக தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரசார் நடத்திய தாக்குதலில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: