விருத்தாசலம், ஏப்.11-

ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி இருவர் பலி ( ஆவணப் படம்)

ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி இருவர் பலி ( ஆவணப் படம்)

தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்களன்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கூட்டத்தைக் காட்டி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவினர் ஆட்களை காலை முதலே அழைத்து வந்து மைதானத்தில் அமரவைத்திருந்தனர்.
கொளுத்தும் வெயிலில் முதல்வரை பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தில் கூட்டத்திற்குள் முண்டியடித்துச் சென்ற சிதம்பரம் நகரைச் சேர்ந்த கருணாகரன் டேவிட் (61), ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (41) ஆகியோர் பலியாயினர். இதில் கருணாகரன் டேவிட்டின் உடல் கடலூர் அரசு மருத்துவமனையிலும், ராதாகிருஷ்ணன் உடல் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டநெரிசல், கொளுத்தும் வெயில் ஆகிய காரணங்களால் 16 பேர் மயக்கமடைந்தனர். ஆனால், அதிமுகவினரோ உடல்நலக்குறைவினால் இருவரும் இறந்துவிட்டதாகக் கூறி உண்மையை மறைக்க முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-விருத்தாசலத்திலிருந்து சிவபாலன்

Leave A Reply

%d bloggers like this: