ராஞ்சி, ஏப்ரல் 11-

ஜார்கண்ட் மாநிலம் ,ஜாம்ஷெட்பூரில் காவல் துறையினர் தடியடி நடத்தியதில் 6 பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், சீத்தராம்தேரா காவல் நிலையத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பாஜக மாவட்டக்குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். அன்று இரவு, ஜார்கண்ட் மாநில உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர்  சர்யூ ராய் இதுகுறித்து விசாரிக்க காவல்நிலையம் வந்தார். அப்போது  இதுகுறித்து தகவல் சேகரிக்க பத்திரிக்கையாளர்களும், அதே நேரத்தில் பாஜக ஆதரவாளர்களும் குவிந்திருந்தினர்.  அப்போது ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பாஜகவினர் வன்முறையில் இறங்க ஆரம்பித்தனர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது  காவல்துறையினரின் தடியடி  தாக்குதலில் 6 பத்திரிக்கையாளர்களும் காயமடைந்திருக்கின்றனர். உடனே அவர்களை மீட்டு  அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களை காவல்துறையினர் விடுவித்தனர் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர், அனூப் டி மேத்யு பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைபெற்ற பிரதிநிதிகள் குழு சந்திப்பிற்கு பின்னர் இத்தடியடியில் சம்பந்தப்பட்ட 3 கான்ஸ்டெபிள்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: