இராமநாதபுரம், ஏப்.10-
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட சிறப்புப் பேரவை மாவட்டத் தலைவர் பி.வடகெரியா தலைமையில் இராமநாதபுரத்தில் நடை பெற்றது எம்.முத்துலெட்சுமி, உடையாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.சசிரேகா துவக்கிவைத்தார்.
மாவட்டச் செயலாளர் ஜி.செல்வராணி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார் உழைக்கும் பெண்கள் ஒருங்கினைப்புக் குழு கன்வீனர் இ.கண்ணகி வாழ்த்தினார்.
நிர்வாகிகள் தேர்வு
மாவட்டத் தலைவராக பி.வடகொரியா, மாவட்டச் செயலாளராக இ.கண்ணகி, பொருளாளராக மாலதி, மாவட்ட துணை நிர்வாகிகளாக செல்வராணி, முத்துலெட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைச் செயலாளர் எஸ்.லெட்சுமி நிறைவுரையாற்றினார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் .
 
 
 
 
 
 
 
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை போதுமான அளவிற்கு நியமிக்க வேண்டும்.
இராமநாதபுரத்தில் இருபாலருக்குமான அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கவேண்டும். அனைத்துப் பேருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு தண்ணீர் வசதியுடன் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.