சிம்லா, ஏப்.8-
இமாச்சல் எம்எல்ஏக்களுக்கு நூறு சதவிகித சம்பள உயர்வு அளித்து மசோதா நிறைவேற்றப்பட்டள்ளது.  சம்பள உயர்வு உட்பட 4 மசோதாக்கள் 5 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாச்சல பிரதேசத்தில் சம்பள மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட 5 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் எம்எல்ஏக்களின் சம்பளம் 20சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
எம்எல்ஏக்களின் மாதம் சம்பளம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு நாள் படி பணம் ரூ.1500ல் இருந்து 1800 ஆக உயர்ந்துள்ளது. பென்சன் 22 ஆயிரத்தில் இருந்து 36 ஆயிரமாக உயரும்.
முதல்வருக்கான சம்பளம் ரூ. 65 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரமாகவும், அமைச்சர்களுக்கான சம்பளம் ரூ, 50 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான மாத படிகள் 30 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும். அண்மையில் இதேபோல் தெலுங்கானாவில் எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களுக்கான சம்பளம் உயர்வு மசோதா உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: