போபால், ஏப்ரல் 8-
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில்  இதுவரை 16 புலிகள் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமாக அரசு சாரா அமைப்பினர் மாநில அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளர்.  அஜய் துபே, பூனை இனத்தைக் காக்கும் பிரயத்னா  என்ற அரசு சாரா அமைப்பின் நிர்வாகி கூறுகையில், மத்திய பிரதேசம் ஒரு முறை புலிகள் மாநிலமாக அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் மாநில அரசாங்கம் கம்Tigress_in_Bandhavgarh_NPபீரமான மிருகங்களை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் கூறினார்.
மேலும் எட்டு வருடங்களாக, சிறப்பு புலிகள் பாதுகாப்பு படை இதுவரை அமைக்கவில்லை என்று கூறினார். வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை பாதுகாவலர், ஷாபாஸ் அஹமத் கூறுகையில் மாநில அரசும், வனத்துறையும் புலிகள் காப்பதில் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.
புலிகள் இயற்கையாக மரணமடைந்தவை என்றும் சிலபுலிகள் மின்சாரத்தினாலும், சில புலிகள் விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன . இதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறினார்.சிறப்பு புலிகள் பாதுகாப்பு படை, அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: