லக்னோ, ஏப்ரல் 8-
பதான்கோட் தாக்குதல் தொடர்பான விசாரணை அதிகாரியாக இருந்து வந்த தேசிய புலனாய்வு அதிகாரி  தன்சில் அகமத் கொலையில், பாதுகாப்பு கொடுக்கும் பணியில் இருந்து கடமை தவறியதாக இரு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ) அதிகாரி தன்சில் அகமத், கடந்த ஏப்ரல் 3-ம் தேதி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் திரும்பி கொண்டிருந்த போது பிஜ்னோர் அருகே அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் . இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓர் உயர் அதிகாரிக்கு பாதுகாப்பு கொடுப்பதில் இருந்து கடமை தவறியதாக  சுரேந்சிர சிங் மற்றும் புத்சிங் ஆகிய இரு காவலர்களை இடைநீக்கம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் சுபாஷ் சிங் பகேல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: