ஸ்ரீ நகர், ஏப்ரல் 7-
ஜம்மு & காஷ்மீரில் தேடப்பட்டு வந்த இரண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள்  இன்று என்கவுன்ட்டர் மூலமாக கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீர், சோபியன் மாவட்டத்திலுள்ள வேஹில் கிராமத்தில்  நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த இரண்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் கூறுகையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்,
அதில் ஒருவர் நசீர் அகமது பண்டிட்,மற்றொருவர் இனாமல் ஹக் அலைஸ் வசீம்மல்லா என்றும் இருவரும் தேடப்பட்டு வரும்
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் என்றும் கூறினார். இதில் ஒருவரான பண்டிட், கடந்த வருடம் காவல்துறை படையிலிருந்து விலகிய பின்னர் தீவிரவாதிகள்  அணிகளில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: