இராமநாதபுரம், ஏப்.7-
மீன் இனப்பெருக்க காலதையொட்டி மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில் 45 நாட்களுக்கு மீனவர்கள் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கை:-
தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாக்கவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், இந்தாண்டும் மீனவர்கள் மேற்படி மீன்பிடி கலன்களை உபயோகப்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடைவிதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள காலங்களில் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது.

Leave a Reply

You must be logged in to post a comment.