diabetesபுது டெல்லி, ஏப்ரல் 7-
உலக சுகாதார தினத்தை(ஏப்ரல் 7) முன்னிட்டு லான்செட் ஆய்வின் படி உலக அளவில்  நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 1980-ல், 108 மில்லியனாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2014-ல், 422 மில்லியனாக அதிகரித்துள்ளது இதில் பாதி பேர் இந்தியா,சீனா, அமெரிக்கா,பிரேசில் மற்றும் இந்தோனிசியாவில் இருப்பவரகள்.
லான்சட்டின் ஆய்வின் படி நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில், 1980-ல் 20.4 மில்லியனாக இருந்த எண்ணிக்கை 2014-ல் 102.9 மில்லியனாக உயர்ந்துள்ளது அதேபோல் இந்தியாவில் 11.9 மில்லியனாக இருந்த எண்ணிக்கை 64.5 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஆதலால் உணவு உட்கொள்ளும் முறையில் மாற்றம் தேவை நார்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகவும், சர்க்கரை மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை குறைவாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பப்ளிக் ஹெல்த் பௌன்டேஷன் ஆப் இந்தியாவின் மருத்துவர் கே. ஸ்ரீ நாத் ரெட்டி,இனிப்பான குளிர்பானங்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும்.  ஏனென்றால் அவைகள் தான் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துவதாகவும் இன்சுலின் சுரப்பதற்கு எதிராக செயல்படுகிறது என்றும் கூறினார். மேலும் ஆரம்ப காலத்தில் கண்டறிதல் மற்றும் தகுந்த சிகிச்சை அளிக்க தவறினால் தீவிரமான பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் நம்மை நாம் பாதுகாப்பது மிகவும் முக்கியமான விஷயமாகவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: