புது டெல்லி, ஏப்ரல் 6-
ஸ்ரீ நகர்  என்.ஐ.டி மாணவர்கள்,  கடந்த வாரம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, மேற்கிந்தியத்தீவுகளிடம் தோற்றது. அப்போது கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் உள்ளுர் மாணவர்கள் மற்றும் பிறமாநில மாணவர்கள் என்ற அளவில் பிரிந்து மோதிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்ந்து வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பில்லாமல் கருதுவதாக வளாகத்தினை விட்டு வெளியேறிய போது காவல் துறையினர் தடியடி நடத்தியதில்  சில மாணவர்களுக்கு காயமடைந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் என்.ஐ.டி வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு & காஷ்மீர் அரசு  மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளித்துள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , ஜம்மு & காஷ்மீர் மாநில முதல்வரான மெகபூபா முப்தியை இச்சம்பவம் தொடர்பாக விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சம் என்ஐடி நிலவரம் குறித்து ஆய்வு செய்திட இருநபர் அடங்கிய குழுவினை அனுப்பி வைத்திருக்கிறது.  கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பாக அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு பற்றிய முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக ஜம்மு & காஷ்மீர் மாநில துணை முதல்வர் நிர்மல் சிங்  கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.டி நிறுவனம் முழுவதும் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று மறுபடியும் திறக்கப்பட்டது. நிர்வாகம் அனைத்து மாணவர்களையும் அழைத்து இப்பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தியது. பாதுகாப்பினை பற்றியும், தேர்வினை தள்ளி வைப்பது தொடர்பாக மாணவர்கள்  கோரிக்கை விடுத்துள்ள நிலையில், என்.ஐ.டி யின் இயக்குனர் அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: