டோக்கியோ, ஏப்.5-
பன்னாட்டு நிறுவனமான ஐபிஎம் ஊழியர்களில் ஐந்து பேரை நிர்வாகம் வேலை நீக்கம் செய்தது தவறு என்று ஜப்பானின் டோக்கியா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நான்கு ஆண் மற்றும் ஒரு பெண் ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் ஐந்து பேரும் தொழிற்சங்கத்தில் நிர்வாகிகளாகப் பணியாற்றி வந்ததுதான் நிறுவன நிர்வாகத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் சரிவர வேலை செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் நிர்வாகம் சொன்னதை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களை வேலை நீக்கம் செய்தது தவறு என்ற தீர்ப்பை வழங்கியதோடு, கடந்த மூன்று மாதங்களுக்கான ஊதியத்தையும் வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: