பயனோஸ்அயர்ஸ், ஏப்.5-
அர்ஜெண்டினாவின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மவுரிசியோ மக்ரியின் கொள்கைகள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதோடு, தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்கவும் செய்துள்ளன. பொதுப் போக்குவரத்து, தண்ணீர், சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றின் விலைகள் கடுமையான உயர்ந்துள்ளன. அதே வேளையில், ஊதியத்தில் வெட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊதியத்தை வெட்டாமல் இருந்தாலும் பெரும் சுமை ஏற்றப்பட்டிருக்கும் என்ற நிலையில், ஊதிய வெட்டு தொழிலாளர்களை பெரும் நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.