ஜெய்பூர், ஏப்ரல் 5-

அஜ்மீரில் உள்ள அஜய்பால் சுற்றுலா தளத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  மீது குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நான்கு பேர் அஜய்பால் பகுதியில் சுற்றுலா வந்திருந்தனர். அதில்  இரண்டு பெண்கள் ஸ்பெயின் மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் . ஒரு ஆண் அமெரிக்காவை சேர்ந்தவர் என்றும் மற்றொரு ஆண் எந்த வெளிநாட்டவர் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் புஷ்கார் பகுதியில் உள்ள விடுதியில் இந்த சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர். பின்னர்  இரண்டு இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஆரவல்லி மலையையும் மற்ற சுற்றுலா தளங்களையும் சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அப்போது அஜய்பால் கோயிலினருகே மது அருந்திவிட்டு வந்த 5 பேர் அவர்களிடம் பேசியுள்ளனர். பின்னர் அவர்கள் சுற்றுலா பயணிகளை துரத்தி தாக்கியுள்ளனர். அப்போது பெண்களின் உடைகளை கிழித்து பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்திருக்கின்றனர். இதை தடுக்க வந்த அவரது ஆண் நண்பரையும் தாக்கி காயமடையச்செய்துள்ளனர். பின்னர் இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மற்றொரு நண்பரான புஷ்கரை அழைத்திருக்கின்றனர்.  அவர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: