ஸ்ரீ நகர், ஏப்ரல் 4-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக மெஹபூபா முஃப்தி(56) பதவியேற்றுக்கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இம்மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி திடீர் உடல் நலக்குறைவினால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரழந்தார்.இதையடுத்து ஜம்மு காஷ்மீரில்  குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
இந்நிலையில் டெல்லியில் கடந்த மாதம் மார்ச் 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை முப்தி முகமது சயீத் மகள் மெஹபூபா முப்தி  சந்தித்து பேசினார். அதன் பின்னர் கடந்த மாதம் மார்ச் 24-ந் தேதி ஸ்ரீ நகரில் உள்ள மெஹபூபாவின் இல்லத்தில் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏக்கள் கூடி மெகபூபாவை முறைப்படி முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
பாரதிய ஜனதா சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுMehabooba-Muftiக்கப்பட்ட  நிர்மல் சிங், ஜம்மு காஷ்மீர் கவர்னர் வோராவை சந்தித்து மெஹபூபா தலைமையில் புதிய அரசு அமைப்பதற்கான கட்சியின் ஆதரவு கடிதத்தை அளித்தார்.ஏப்ரல் 4-ம் தேதி புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜம்மு நகரில் உள்ள கவர்னர் மாளிகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13-வது முதல்வராக இன்று காலை 11 மணியளவில் பதவியேற்றார். இவர் அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற சிறப்பை பெறுகிறார். மாநில துணை முதல்வராக டாக்டர் நிர்மல் சிங்கும் மற்றும் இதர அமைச்சர்களுக்கும் கவர்னர் வோரா பதவிப்பிரமாணமும், காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, ஜிதேந்திர சிங் , காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.