ராய்பூர், ஏப்,3-

ஓரே பிரசவத்தில் 5 குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பது உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்ல உலக அளவில் மிகப்பெரிய செய்தியாக மாறியிருக்கிறது.5 star babys
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் மனிதாசிங் – மகேஷ் என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவர்களுக்குக் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் மிகவும் வேதனையடைந்த அந்தக் குடும்பதினர். அடுத்த குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என மிகவும் கவனமாக இருந்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மனிதா சிங் கற்பமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உடனே குடும்பத்திற்கே ஒரே மகிழ்ச்சி.
மிகவும் கவனத்துடன் இருந்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று காலையில் மனிதா சிங்கிற்கு வயிற்று வலி ஏற்பட்டிருந்திருக்கிறது. இதையடுத்து மனிதா சிங்கை அம்பிகாபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். நேரம் செல்லச் செல்ல வலி அதிகமாக மனிதா சிங்கின் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்திருக்கின்றனர். இந்நிலையில் காலை 11 மணியளவில் மீண்டும் வலி அதிகமாகப் பிரசவவலி ஏற்பட்டிருந்திருக்கிறது. இதையடுத்து மருத்துவர்கள் அவரச சிகிச்சை பிரிவிற்குக் கொண்டு சென்று கவனித்திருக்கின்றனர். பின்னர்ச் சிறிது நேரத்தில் நடைபெற்ற சுகப்பிரசவத்தில் மருத்துவர்களுக்கு ஓரே அதிர்ச்சி, முதலில் ஒரு குழந்தை என நினைத்துக் கையில் எடுக்க, அடுத்து ஒரு குழந்தை எனத் தெரிந்தவுடன் இரட்டை குழந்தை என நினைத்திருக்கின்றனர். மீண்டும் ஒரு குழந்தை, மீண்டும் ஒரு குழந்தை எனத் தொடர்ந்து 5 குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். ஐந்து குழந்தைகளும் தாயும் நலமுடன் இருந்திருக்கின்றனர். மேலும் ஆச்சரியமடைந்த மருத்துவர்கள் குழந்தைகளின் எடையை அளந்து பார்த்த போது, ஒரு குழந்தை ஒரு கிலோவுடனும், ஒரு குழந்தை 1. 5 கிலோவும் இருந்திருக்கின்றனர். சராசரியாக ஒவ்வொரு குழந்தையும் சராசரியாக ஒரு கிலோ 360 கிராம் எடையுடன் இருந்திருக்கின்றனர். இந்தச் செய்தி மருத்துவமனை முழுவதும் பரவி, பின்னர் அந்த ஊர் முழுவதும் பரவியிருக்கிறது.
இந்தியாவில் முதன் முதலில் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் என்ற பெருமையை மனிதாசிங்- மகேஷ் தம்பதியினர் பெற்றிருக்கின்றனர். இதன் காரணமாக இந்தக் குழந்தைகளைப் ப்பைவ் ஸ்டார் குழந்தைகள் என அழைக்கின்றனர் என முதன்மை கண்காணிப்பு மருத்துவர் பாண்டே கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: