நியூயார்க், ஏப்ரல் 3-
நாசா விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிலையத்தில் அதிகநாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்தவர். அமெரிக்க விண்வெளி மைய(நாசா) பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 1996-ம் வருடம் விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார் பின்னர் இவர் 4 முறை விண்வெளி சென்று திரும்பியிருக்கிறார்.
கடந்த மாதம் தான் 340- நாட்கள் விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிலையத்தில் தங்கியிருந்து சாதனை படைத்து விட்டு பூமி திரும்பினார். இந்நிலையில் இவர் இம்மாதம் ஒன்றாம் தேதியோடு நாசாவிலிருந்து ஓய்வு nasa-scott-kellyற்றார். இவர் மொத்தம் 520- நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.