கொல்கத்தா மேம்பால விபத்து:

காரணமானவர்களைத் தண்டித்திடுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

புதுதில்லி, ஏப்ரல் 2-

கொல்கத்தா மேம்பால விபத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து ஏராளமானோர் தங்கள் உயிரை இழந்துள்ளதற்கும், பலர் கொடுங்காயங்கள் அடைந்திருப்பதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது.  இத்துயர சம்பவத்தில் உயிரை இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இரு நாட்கள் முழுமையாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை உதவிகளை அளிப்பதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. காயம் அடைந்தோருக்கும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்போருக்கும் ரத்தம் வழங்குவதற்காக ஒரு ரத்த நன்கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மேம்பாலம் கட்டுமானப்பணிகளுடன் தொடர்புடைய பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த துணை ஒப்பந்தக்காரர்களுக்கும் (சப்-கான்ட்ராக்டர்கள்) ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே பிணைப்பு இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இத்துயரார்ந்த சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து ஓர் உயர்மட்ட அளவில் ஒரு காலக்கெடு நிர்ணயத்து சுயேச்சையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.  இச்சம்பவத்திற்கு யார் காரணமானவர்கள் என்பதை நிறுவுவதற்கும், அதன் அடிப்படையில் அவர்களைத் தண்டிப்பதற்கும் இது அவசியமாகும்.

இதற்கு ஒரு சுயேச்சையான விசாரணைக் குழு அமைத்து, அதுபோன்றதொரு புலன்விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

(ந.நி.

Leave A Reply

%d bloggers like this: