உடுமலை, ஏப். 2-
உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் சாதி ஆணவ  படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் இன்று சரணடைந்துள்ளார்.
கடந்த மார்ச் 13ம் தேதி உடுமலைப்பேட்டை சங்கர் என்ற தலித் இளைஞர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சங்கரின் மனைவி கௌசல்யாவின் குடும்பத்தினரே முக்கிய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சங்கர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் கலைதமிழ்வாணன் என்பவர் சரணடைந்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.