உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதும், ஹரிஷ்ராவத் அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப் பட்டிருப்பதும் ஜனநாயகத்தின் மீதும், அரசமைப்புச் சட்ட நெறிமுறைகள் மீதும் மற்றும் மாநிலங்களின் உரிமைகள் மீதும் மோடி அரசாங்கத்தால் ஏவப்பட்டுள்ள படுமோசமான தாக்குதலாகும். ஒரு சில வாரங்களுங்களுக்கு முன் காங்கிரசிலிருந்து கட்சி தாவி வந்தவர்களையும் பாஜகவினரையும் வைத்து ஓர் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக அரு அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணித்தபின் இப்போது உத்தரகாண்டில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசமைப்புச்சட்டத்தின் இராட்சசத் தனமான 356ஆவது பிரிவைப்பயன்படுத்தி வாய்ப்பு ஏதேனும் கிடைத்தால் பாஜக அல்லாத மாநில அரசுகளைக் களைத்திடும் நடவடிக்கைகளில் மோடி அரசாங்கம் இறங்கி இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களைத் தான்தோன்றித்தனமாக டிஸ்மிஸ் செய்திடவும், மத்தியில் ஆளும் கட்சியின் அரசியல் நலன்களை முன்னெடுத்துச் செல்லவும், மத்திய அரசாங்கத்தின் கைகளில் ஓர் ஆயுதமாக இருந்து வந்திருக்கிறது.
இதற்கு மிகவும் சரியான உதாரணம், 1959இல் கேரளாவில் இஎம்எஸ் நம்பூதிரிபாட் அமைச்சரவை, ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகும். அதன்பின்னர் 356ஆவது பிரிவு மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கத்தால் ஓர் அரசியல் கருவியாக பலமுறைப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. மிகவும் வெளிப்படையாகவும் எதேச் சதிகாரமாகவும் தெரிகின்ற 356ஆவது பிரிவைப் பயன்படுத்திட, மாநிலத்தில் அரசமைப்புச்சட்ட நிர்வாக எந்திரம் நிலைகுலைந்து வீழ்ந்துவிட்டது என்று மாநில ஆளுநரிடமிருந்து ஓர் அறிக்கை மட்டுமே தேவை. மத்திய அரசாங்கம், தனக்கு வேண்டும் போதெல்லாம், தன்னால் நியமிக்கப்பட்ட எளிதில் வளையக் கூடிய ஆளுநர்களைப் பயன்படுத்தி, அத்தகைய அறிக்கைகளைப் பெற்று அவற்றின் மீது நடவடிக்கைகளை எடுக்கிறது. அதனால்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசாங்கத்தால் 356ஆவது பிரிவு பயன்படுத்தப்படுவதை உறுதியாக எதிர்த்து வந்திருக்கிறது.
356ஆவது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக, மத்திய அரசு தான்தோன்றித்தனமாக அமல்படுத்த முடியாத வகையில் ஒரு பொருத்தமான பிரிவு சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறி வந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து, கட்சி ஒரே யொரு முறைதான் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ஆதரித்திருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1992இல் அது நடந்தது. உத்த ரப்பிரதேசத்தில் அப்போது ஆட்சி செய்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அமைச்சரவை பாபர் மசூதியை இடித்த இருண்ட செயலை செய்துமுடித்தபின், ராஜினாமா செய்தது. எனவே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது அயோத்திக்கு கரசேவகர்களை அனுப்பி உதவிய மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பாஜக மாநிலஅரசாங்கங்களையும் கலைத்து மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதானது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை மதச்சார்பற்றக் கொள்கைக்கு எதிரான தாகும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாவாவுக்கு உட்பட்ட இடத்தில் தற்போதுள்ள நிலையில் எவ்வித மாற்றத்தை யும் செய்யக்கூடாது என்று தீர்ப்பு வழங்கி இருந்தது. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மதவெறி வன்முறைத் தாக்கு தல்கள் நாட்டில் அலை அலையாகத் தொடர்ந்தன. நாட்டில் பல்வேறு சமூகத்தினரிடையே நிலவிவந்த வகுப்பு ஒற்றுமையும் மதச்சார்பின்மை மாண்பு சீர்குலைந்தது.
இந்தப் பின்னணியில்தான் இம்மாநில அரசுகள் கலைக்கப்பட்டு, அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட போது அவற்றை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.இதன்பின்னர் நடைபெற்ற மாநிலங் களுக்கு இடையிலான கவுன்சில் (ஐவேநச-ளுவயவந ஊடிரnஉடை) கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளும் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால்அல்லது மாநிலத்தில் மதச்சார் பின்மைக் கொள்கைக்கு ஊறு விளைவிக்கப்படு மானால் இப்பிரிவைப் பயன்படுத்தலாம் என்கிற ரீதியில் இப்பிரிவிற்கு திருத்தத் தைக் கொண்டுவர வேண்டும் என்று வாதிட்டன. அருணாச்சலப் பிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் 356ஆவது பிரிவிற்குப் பலியாகியிருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் இப்போதாவது கடந்த காலங்களில் 356ஆவது பிரிவை மிகவும் ஒருதலைப் ட்சமாகவும், பண்பாடற்ற முறையிலும் பயன்படுத்தி, நாட்டின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி அமைப்பு முறைக்குக் குந்தகம் விளைவித்து வந்ததை உணர வேண்டும். பாஜக அரசாங்கமும் அதே பாதை யில் பயணிக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் தன் பெரும்பான் மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க காலக் கெடு விதிக்கப்பட்டிருந்த தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் தன் பெரும்பான்மையை மார்ச்28 அன்று மெய்ப்பிக்க வேண்டும் என்றுஆளுநர் கட்டளையிட்டிருந்தார். அதன்படிதான் அந்தக்கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிவிட் டார்கள் என்றும் அவர்கள் பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதனால்தான் இப்பிரச்சனை எழுந்தது என்றும் கூறப்படுகிறது. மேற்படி ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களையும் பேரவைத் தலைவர் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்துவிட்டார். இவ்வாறு தகுதிநீக்கம் செய்யப்பட்டபிறகு, முதலமைச்சர் பெரும்பான்மை பெற்றுவிடுவார் என்பது தெளிவாகிய போது, மத்திய அமைச்சரவை, வாக் கெடுப்பு நடைபெறுவதற்கு முதல்நாள் துரிதகதியில் கூடி, அம்மாநிலத்தில் குடி யரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. பாஜக அரசாங்கம் இதர காங்கிரஸ் அரசாங்கங்களையும் கவிழ்த்திட குறிவைத்திருக்கிறது. பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, “நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் ஆளும் மாநிலங் களில் கலகங்கள் நடைபெறவிருக்கின்றன’’ என்று அறிவித்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறியிருப்பதன்மூலம் அடுத்து இமாச்சலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய வற்றின்மீது உடனடியாக அவர்கள் குறி வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
356ஆவது பிரிவு, மத்திய அரசாங்கத்தின் கருணையின்கீழ் மாநில அரசாங்கங் களைக் கொண்டுவருவதற்கான எதேச்சதிகார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. பாஜக அர சாங்கத்தின் எதேச்சதிகாரத்தால் ஏற்பட்டுள்ள அச் சுறுத்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் உணர வேண்டும். அதன் தாக்குதல்களை ஒன்றுபட்டு நின்று தடுத்திட முன்வர வேண்டும். முதல்வர் ஹரிஷ் ராவத் தாக்கல் செய்தமனுவின்மீது உத்தரகாண்ட் உயர்நீதிமன் றத்தின் ஓர் உறுப்பினர் அமர்வாயம் உத்தரகாண்ட் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும் பான்மையைத் தீர்மானிக்க மார்ச் 31ஆம் தேதியை நிச்சயித்திருந்தது. நீதிமன்றம், தகுதிநீக்கம் செய்யப் பட்ட ஒன்பது உறுப்பினர்களும் வாக்களித்திடவும் அனுமதித்திருந்தது, ஆயினும் அவர்களின் வாக்குகள் தனியே வைக் கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது. 1994ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பின்அடிப்படையில் இவ்வாறு சரியான நிலைஎடுத்தது. 356ஆவது பிரிவு எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று எஸ்.ஆர் பொம்மை வழக்கு தீர்ப்பு மிகச்சரியாக விதிமுறைகளை நிர்ணயித்திருந்தது. அந்தத் தீர்ப்பில், சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்படும் வாக்கு எண்ணிக்கை (கடடிடிச வநளவ)தான் இறுதித்தீர்ப்பு வழங்கும் நடுவர் (யசbவைநச) என்றும், இது தவிர ஆளுநரோ அல்லது மத்திய அரசின் விருப்பு வெறுப்புகளோ அல்ல என்றும் மிகவும் தெளிவாகக் கூறியிருந்தது. ஆயினும் உத்தரகாண்ட் உயர்நீதி மன்றத்தின் ஒரு நபர் அமர்வாயத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் இரு நபர் அமர்வாயத்தில் மேல்முறையீடு செய்ததைஅடுத்து, மார்ச் 31 அன்று சட்டமன்றத் தைக் கூட்டி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டாம் என்றும், இதில் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும்வரை காத்திருக்கு மாறும் பணித்திருக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எப்படிவந்தாலும், உச்சநீதிமன்றம், அருணாச் சலப்பிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள குடியரசுத்தலைவர் ஆட்சியின் சட்டப்படி செல்லக்கூடிய தன்மை (எயடனைவைல) குறித்து, தாமதமின்றி தீர்ப்பினை வழங்கிடுவது நலம் பயக்கும். எந்த அளவுகோலின்படி பார்த்தாலும், மோடி அரசாங்கம் எஸ்.ஆர்.பொம்மை வழக்குதீர்ப்புக்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறது. இடதுசாரிகளும் மதச்சார்பற்ற சக்திகளும் இப்பிரச்சனையில் தொலை நோக்குப் பார்வையுடன் ஒரு முடிவினை எடுத்திட வேண்டும். 356ஆவது பிரிவுரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாகமாநிலங்களின் உரிமைகளும் கூட்டாட் சித் தத்துவத்தின் மாண்புகளும் பாதுகாக் கப்படக் கூடிய விதத்தில் பொருத்தமான ஷரத்து சேர்க்கப்பட வேண்டும்.
356ஆவது பிரிவு, மத்திய அரசாங்கத்தின் கருணையின்கீழ் மாநில அரசாங்கங்களைக் கொண்டுவருவதற்கான எதேச்சதிகார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. பாஜக அரசாங்கத்தின் எதேச்சதிகாரத்தால் ஏற்பட்டுள்ள அச் சுறுத்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் உணர வேண்டும். அதன் தாக்குதல்களை ஒன்றுபட்டு நின்று தடுத்திட முன்வர வேண்டும்.
மார்ச் 30, 2016
தமிழில் : ச.வீரமணி

Leave a Reply

You must be logged in to post a comment.