கொல்கத்தா, ஏப். 1-
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து விழுந்த சம்பவத்தில் தனது தவறை மறைக்க முன்னுக்குப் பின் முரணாக கட்டுமான நிறுவனம் கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் வியாழனன்று இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த ஹைதராபாத் ஐ.வி.ஆர்.சி.எல் நிறுவனத்தின் மனித வளத்துறை நிர்வாக குழுத்தலைவர் பாண்டுரங்க ராவ் நாங்கள் 27 ஆண்டுகளாக ஏராளமான பாலங்களை கட்டி உள்ளோம். ஆனால் தற்போது கட்டிடம் இடிந்து விழுந்தது கடவுளின் செயலே தவிர வேறொன்றும் இல்லை என்றார். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கடும்  எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து இன்று அந்நிறுவனத்தின் சட்ட ஆலோசனைக் குழுத் தலைவர் பி. சீதா செய்தியாளர்களிடம் கூறும்போது கடவுன் செயல் என்ற கூற்று இதுபோன்ற நிகழ்வுகள் ஒருவர் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதை தெரிவித்தவிதம் அவ்வளவே.
நாங்கள் இச் செய்தியினால் கடும் அதிர்ச்சியில் உள்ளோம். விசாரணையில் முழு ஒத்துழைப்பையும் அளிப்போம். இடிபாடு குறித்த புகைப்படங்களை பார்க்கும் போது குண்டுவெடிப்புப் பகுதி போல் இருந்தது. பாலம் இடிந்து விழுந்தது அணைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும் இது எப்படி நிகழ்ந்தது. நாங்களும் காரணத்தை அறிய ஆவலாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் அதிகாரிகள் அடுத்தடுத்து பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.