கொல்கத்தா, மார்ச் 31-
மேற்கு வங்க மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 21க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு கொல்கத்தா பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வியாழனன்று காலை வழக்கம்போல் கட்டுமானப்பணிகள் நடந்து வந்தபோது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இதில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இடிபாடுகளில் சிக்கியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.kolkata-bridge-rescue-3-750x500

Leave a Reply

You must be logged in to post a comment.