பாட்னா , மார்ச் 31-

பீகாரின் முதலமைச்சர் நிதிஷ்குமார் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறிதியின்படி ஏப்ரல் 1-ந் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இது தொடர்பான சட்ட திருத்தம் நேற்று பீகார் மாநில சட்ட சபையில் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து பீகாரில் இனி மது விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சட்டசபையில் நிதிஷ்குமார் நாளை முதல் மது குடிக்க மாட்டோம் எbiharன்று ஒவ்வொரு எம்.எல்.ஏ வும் உறுதி எடுக்க வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் கைகளை உயர்த்தி , இனி நாங்கள்   மது குடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர். இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பூரண மது விலக்கை அமல்படுத்த கடும் தண்டனை சட்டங்களும், தடையை மீறி விற்பனை செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என்று சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: