ஓசூர்,மார்ச் 30-
கர்நாடகாவிற்கு மணல் கடத்த முயன்ற 31 லாரிகளை வருவாய் துறை அதிகாரிகள் ஓசூரில் பறிமுதல் செய்தனர். திருச்சி, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடகாவிற்கு மணல் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை நடத்திய வாகன சோதனையில் மணல் கடத்த முயன்ற 16 லாரிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று நெல்லூர், வரகானப்பள்ளி பகுதியில் நடந்த சோதனையில் 5 மணல் லாரிகளையும், ராய்க்கோட்டை பகுதியில் 7 மணல் லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் ஓசூர் சுற்று வட்டாரத்தில் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 186 யூனிட் மணல், மற்றும் 31 லாரிகளை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.