பேராவூரணி, மார்ச் 30-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள விளங்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா ( 43) விவசாயி. இவருக்கு சொந்தமாக ஓட்டு வீடும், அதையொட்டி பின்பகுதியில் குடிசை வீடும் உள்ளது.
செவ்வாய் நள்ளிரவு திடீரென குடிசை வீட்டில் தீ பற்றியது. இதில் அருகிலிருந்த ஓட்டு வீடும் சேதமடைந்தது. வீட்டிலிருந்த பொருட்கள், பத்திரம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தீயை அணைத்தனர். சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: