புதுதில்லி, மார்ச்.30–
வங்கிகளில் கடன் பெற்ற தொகையை ஸ்வாக செய்ய முயலும் விஜய்மல்லையா மீது உச்ச நீதிமன்றத்தில் அரசு பொதுத்துறை வங்கிகள் வழக்கு தொடுத்திருக்கின்றன. இந்நிலையில் பாஜக அரசின் உதவியோடு விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார். இந்நிலையில் இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தனர். vijayஅதில்  அந்த அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் அளித்த வங்கிகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க விஜய் மல்லையா முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஒரு வாரத்திற்குள் பரிசீலித்து முடிவுசெய்யும்படி அவருக்கு கடன் அளித்த வங்கிகளை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல்  7-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

Leave A Reply

%d bloggers like this: