மன்னார்குடி, மார்ச் 30-
ரூ.3 கோடி மதிப்பிலான தேக்கு மரங்கள் விதிகளுக்குப் புறம்பாக வடுவூர் வருவாய் சரக கிராமங்களில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனால் தேக்கு மரங்களின் டிம்பர் தன்மை மாறி இற்றுப்போய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. தேக்கு மரங்களை முறையாகப் பாதுகாக்க வேண்டும். மரங்களை விற்பதற்கு வனத்துறையும் திருவாரூர்  மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென 17.1.2016 தீக்கதிரில் “இந்த இழப்பிற்கு யார் பொறுப்பு” என்ற தலைப்பில் சிறப்புப் செய்தி வெளியாகியிருந்தது.
இதையடுத்து, திருவாரூர் மாவட்ட வனத்துறை மூன்று கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த தேக்குமரக் கிடங்குகளை அப்புறப்படுத்திவிட்டது. அப்புறப்படுத்தப்பட்ட மரங்கள் செருமங்கலம் நிரந்தர வனத்துறை கிடங்கில் பாதுகாக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், வடுவூர் புதுக்கோட்டை தென்பாதி ஊராட்சியைச் சேர்ந்த அடிச்சேரி கிராம தனியார் விவசாயிகளுக்கு வாடகையாக சுமார் ஒரு லட்ச ரூபாய் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: