பேராவூரணி, மார்ச் 30-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாடியம்பாள்புரம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மலர்விழி (45). சம்பவத்தன்று தனது தாயாருடன் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் மலர்விழி அணிந்திருந்த எட்டு பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார்.
பட்டுக்கோட்டை கரிக்காடு காந்தி நகர் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மரியம் பிரான்சிஸ். இவரது மனைவி சாந்தார்க் (50). இவர் வீட்டிலிருந்து கடைக்கு சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் சாந்தார்க் அணிந்திருந்த ஐந்து பவுன் சங்கிலியைப் பறித்து கொண்டு தப்பியோடிவிட்டார்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: