karur vetrilai photoகரூர், மார்ச் 29-
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், என்.புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இங்கு விளையும் வெற்றிலைகளை வேலாயுதம்பாளையம் பகுதிகளில் செயல்பட்டுவரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், விவசாயிகள் அசோசியேசன் வெற்றிலை மண்டிக்கும் அனுப்பிவைக்கின்றனர்.
தவிர. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கின்றனர்.
“கடந்த வாரம் கற்பூரி முதல் ரகம் வெற்றிலை ரூ.2500–க்கும், இரண்டாவது ரகம் ரூ.1500–க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். அதே போல் வெள்ளைக்கொடி வெற்றிலை முதல் ரகம் ரூ.6000–க்கும், இரண்டாவது ரகம் ரூ.3000–க்கும் வாங்கிச்சென்றனர்.
ஆனால், இந்த வாரம் கற்பூரி முதல் ரகம் வெற்றிலை ரூ.1500–க்கும், இரண்டாவது ரகம் ரூ.1000–க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றுள்ளனர். அதே போல் வெள்ளைக்கொடி வெற்றிலை முதல் ரகம் ரூ.4000–க்கும், இரண்டாவது ரகம் ரூ.1500–க்கும் வாங்கிச்சென்றுள்ளனர்.
ஆந்திராவிலிருந்து வெற்றிலை சென்னை, விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கும் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் வெற்றிலை விலை வீழ்ச்சியடைந்துள்து. இதனால் விவசாயிகள் கவலைடைந்துள்ளனர்.
-நமது நிருபர்

Leave a Reply

You must be logged in to post a comment.