PRPதமிழக வரலாற்றில் மலைகளையும், கண்மாய்களையும் விழுங்கியதாக வரும் வழக்கு என்றால் அது பிஆர்பி கிரானைட் முறைகேடு வழக்குதான். இந்த வழக்கு தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே திரும்பி பார்க்க வழக்கு,
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியே உயர் நீதிமன்றம் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி உ.சாகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த ஆணையிட்டது.
இந்த வழக்கில் யாரும் எதிர்பாராத வகையில் தற்போது பிஆர்பி பழனிச்சாமியை விடுதலை செய்வதாக மேலூர் குற்றவியல் நடுவர் மகேந்திர பூபதி தீர்ப்பளித்திருக்கிறார். இது அனைவரின் கவனத்தையும் நீதித்துறையின் பக்கம் ஈர்த்திருக்கிறது.
மேலூர் மாவட்டம் கீழையூர் பகுதியில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி அடுக்கி வைத்தது தொடர்பான வழக்கு மேலூர் குற்றவியல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அதன் பங்குதாரர்களையும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மகாதேவன் என்பவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிஆர்பி கிரானைட் வழக்கு  கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மகேந்திரபூபதி வழங்கிய தீர்ப்பின் ஒரு சுருக்கம் வருமாறு : 2013 ஜூலை 18இல் வழக்கு தொடர்ந்த அன்சுல்மிஸ்ரா, மாவட்ட ஆட்சியராக இல்லை, மேலும் வேறு பணிக்கு மாற்றப்பட்ட நிலையில் தான், மதுரை மாவட்ட ஆட்சியர் என பொய்யாக வழக்கு  தொடர்ந்துள்ளார். அதற்கான ஆவணங்களையும் நீதி மன்றத்தில் வழங்கியுள்ளார். இந்திய தண்டனை சட்டம் 181,182,193,199 ஆகிய பிரிவுகளில் அவர் குற்றம் புரிந்துள்ளார். மேலும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி  மற்றும் சீலா ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்ததாக நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களது செயலை பொருத்து குற்றவிசாரணை நடைமுறைச்சட்டம் 197(1பி) பிரிவின் படி அரசிடம் முன் அனுமதி பெற்று குற்றமுறையீடு தொடர்ந்திட நீதிமன்றம் தலைமை எழுத்தருக்கு உத்தரவிடுகிறது என்று தீர்ப்பின் ஒரு பகுதியாக கூறியிருக்கிறார்.

தற்போது தீர்ப்பளித்திருக்கும்  நீதிபதி மகேந்திர பூபதி  கிரானைட் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக கடந்த வாரம் புகார் எழுந்தது.  குறிப்பாக இந்த வழக்கில்  உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக மகேந்திரபூபதி செயல்படுகிறார் எனச் சொல்லி அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உரிய விளக்கம் கேட்டு மகேந்திரபூபதிக்கு உத்தரவிட்டது. இந்நிலையிலேயே பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு மகேந்திரபூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரைத்திருந்தார். இச்சுழலில்தான் அவசர அவசரமாக நீதிபதி  மகேந்திர மகேந்திரபூபதி கிரானைட் மோசடி வழக்கில் பி.ஆர்.பி.யை இன்று விடுதலை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: