மும்பை, மார்ச் 28-
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடன் தொல்லையால் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  நாசிக் பகுதியைச் சேர்ந்த தத்து சவுத்ரி (48) என்ற விவசாயி விவசாயத்திற்காக 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி நிலவியதால் விவசாயத்திற்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாத சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து தத்து கடந்த ஞாயிறன்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தையடுத்து farmer-suicide நந்த்கயான் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

%d bloggers like this: