mining-11ராஞ்சி, மார்ச் 28-
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் இஸ்பார்ட் நிறுவன இயக்குனர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு நிதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் இன்ஸ்பார்ட் நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதன் நிர்வாக இயக்குனர்கள் ஆர்.எஸ் ருங்டா மற்றம் ஆர்.சி ருங்டா ஆகியோர் குற்றவாளிகள் என்று திங்களன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தனது முதல் தீர்பை அளித்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கான தண்டனை விபரம் வரும் மார்ச் 31 தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டள்ள ஆர்.சி ருங்டா வழங்கப்பட்டுள்ள ஆர்.எஸ் ருங்டா இருவரும் தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி சுரங்க முறைகேட்டில் தொடர்பு உள்ளது என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: