சிவகங்கை, மார்ச் 28–
சிவகங்கை அருகே பொறியியல் கல்லூரி மாணவரும், மற்றொரு கல்லூரியில் படிக்கும் மாணவியும் தற்கொலை செய்துகொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் சக்கந்தி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாசாணம். இவரது மகன் மகேந்திரன் (20). இதே ஊரைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் அகிலா (20).
மகேந்திரன் பூவந்தி அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 2–ஆம் ஆண்டு படித்து வந்தார். அகிலா சிவகங்கையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2–ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இரண்டு பேரும் காதலித்து வந்ததுள்ளனர்.
இந்நிலையில், திருமணம் செய்து கொள்ள அவர்களது உறவுமுறை தடையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால். மகேந்திரன்–அகிலா இருவரும் ஞாயிறு இரவு வீட்டை விட்டு வெளியேறி மீனாட்சிபுரம் கண்மாய் அருகே உள்ள தோட்டத்திற்குச் சென்று விஷம் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் இறந்துவிட்டனர்.
திங்களன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் இரண்டு பேரும் இறந்து கிடப்பதைப் பார்த்து அவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இருவரின் பெற்றோர்களும் மகன், மகளின் உடலைப் பார்த்துக் கதறியழுதனர். இச்சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: