சிவகங்கை, மார்ச் 28-
காரைக்குடியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை நடைபெற்றுள்ளது. காரைக்குடி பி.டி.நகர் 6-வது தெருவில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனை உள்ளது. இதற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ரூ.8 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு பின்புறமுள்ள ஜெயஸ்ரீ என்பவரது வீட்டில் புகுந்த அடையளாம் தெரியாத நபர்கள் ரூ.12 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் வழக்குரைஞர் வீடு மற்றும் பள்ளியில் கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றுள்ளது. காரைக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: