கரூர், மார்ச் 28-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் வயலூரைச் சேர்ந்தவர்கள் செந்தில் (40), காளிதாஸ் (45). இவர்கள் இருவரும் கேரளத்திற்கு வாழைக்காய்களை கொண்டு சென்று விற்றுவிட்டு ரூ.2.19 லட்சத்துடன் வந்துகொண்டிருந்தனர். கருர் மாவட்டம் குளித்தலை ரயில்வே கேட் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமார் தலைமையிலான குழுவினர் வாகனத்தை தணிக்கை செய்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த பணத்திற்கான ஆவணத்தில் உரிய கையெழுத்து பெறப்படவில்லை. இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: