salem-dyfiசேலம், மார்ச் 27-
விபத்தில் பலியான லோட்டஸ் டிவி ஊழியரை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து வாலிபர் சங்கத்தினர் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரது குடும்பத்திற்கு தாங்களால் இயன்ற உதவியை செய்துள்ளனர்.
லோட்டஸ் டிவியின் சேலம் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தவர் ரமேஷ் (38) சமீபத்தில் சாலை விபத்தில் பலியானார். இவருக்கு பேபி என்ற மனைவியும் உமகேஸ்வரி, பத்மஸ்ரீ என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். உமகேஸ்வரி ஏழாம் வகுப்பும், பத்மஸ்ரீ ஆறாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
லோட்டஸ் டிவி நிறுவனம் ரமேஷ்க்கு எட்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை, சாலை விபத்தில் பலியான அவரது குடும்பத்தை இன்று வரை அந்த நிறுவனம் கண்டு கொள்ளவில்லை, குறைந்தபட்சம் இழப்பீட்டுத் தொகை கூட வழங்கவில்லை. பலியான ரமேஷ் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் பகத்சிங். ராஜகுரு. சுகதேவ் நினைவுதினத்தையொட்டி ஞாயின்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது, இதன் மூலம் கிடைக்கப் பெற்ற தொகையை ரமேஷ் குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்தது.
குருதிக்கொடை முகாம் மூலம் கிடைக்கப்பெற்ற 10 ஆயிரத்தை வாலிபர் சங்கத்தினர் சேலம் பிரஸ் கிளப் நிர்வாகி ரத்தினகுமாரிடம் வாலிபர் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் என்,பிரவீன்குமார், மாவட்டப் பொருளாளர் வி.வெங்கேடஸ், கதிர்வேல். சசிக்குமார். சதீஸ்குமார் ஆகியோர் வழங்கினர்.
பத்திரிகையாளர்கள்
இதே போல் சேலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் 32 ஆயிரம் ரமேஷ் குடும்பத்தினருக்கு வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.