திருச்சிராப்பள்ளி, மார்ச் 26 –

தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தேமுதிக -–மக்கள் நலக் கூட்டணியின் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருச்சி ஓட்டல் பெமினாவில், தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி வழக்கறிஞர்களின் மாநாடு, சனிக்கிழமையன்று காலை நடைபெற்றது. இதில், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தியாவின் தேர்தல் முறையில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்ற அடிப் படையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்; தேசத் துரோக குற்றச்சாட்டுப்பிரிவு 124(ஏ) இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்; சட்டத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாநாட்டிற்கு வழக்கறிஞர் தேவதாஸ் தலைமை வகித்தார். வழக்கறி ஞர்கள் வெற்றிவேல், முத்து அமுதநாதன், அழகிரிசாமி, பார்வேந்தன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் வீரபாண்டியன் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற் றினார். இந்திய அரசியல் சாசனச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகித்தவர்களில் 90 சதவிகிதத்தினர் காங்கிரஸ்காரர்கள். இருவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர். எந்த கட்சியிலும் சேராத ஒருவர் அந்த சபையில் இருந்தார். அவர்தான் டாக்டர் அம்பேத்கர். அவரே அரசியல்சாசன சட்ட வரைவு திட்டத்தின் கன்வீன ராக இருந்தார். ஆரம்பத்தில் அவரை கன்வீனராக அந்த சபையில் உள்ளோர் ஏற்கவில்லை. ஆனால் நேருதான், ‘ஒடுக்கப்பட்ட கடைசி மனிதனுக்கான பாதுகாப் பையும் உறுதி செய்வதற்கு அதை அனு பவித்து உணர்ந்தவர்கள்தான் எழுத வேண்டும்; அப்போதுதான் அதில் உண்மை வெளிப் படும்; அந்தத் தகுதி அம்பேத்கருக்குத்தான் இருக்கிறது” என்று தா.பாண்டியன் குறிப்பிட் டார்.அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சாசன சட்ட வரைவு நகலை தாக்கல் செய்து புகழ்வாய்ந்த தொகுப்புரையை அம்பேத்கர் வழங்கினார். மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால் அவரின் தொகுப்புரையை மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் தொகுப்புரையாற்றினார். பின்னர் கருத்தரங்கம் நடைபெற்றது.

வழக்கறிஞர்கள் அழகு சுந்தரம், கோதண்டம், சுப்ரமணியம், பேரா.முருகையன், அந்திரிதாஸ், ராஜமாணிக்கம், பாண்டியன், வெள்ளை நெஞ்சன் ஆகியோர் பேசினர்.தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வழக்கறிஞர் அருள் நன்றி கூறினார். (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.