கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கி தருவதாக கூறி விருதுநகரை சேர்ந்த எம்.சி.செல்வகுமார்  ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த மாணவர் ரூபன் (வயது 20) சென்னை போலிஸ் ஆணையர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து புகார் அளித்தார்.
அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில் விருதுநகர் பேருந்து நிலையம் அருகே செல்வகுமார் இருப்பதாக நேற்று முன்தினம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது .அதன்பேரில் போலீஸார் விருதுநகருக்கு சென்று அவரை கைது செய்தனர்.விசாரணையில் மாணவர் ரூபனை ஏமாற்றியது போன்று மேலும் பல மாணவர்களிடம் லட்சக்கணக்கில் செல்வக்குமார்  மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: