கும்பகோணம், மார்ச் 27-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள கொத்தங்குடியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் தனசேகர் (55). விவசாயியான இவர் ஞாயிறன்று அதிகாலை விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்டார்.
தனசேகருக்கு இந்திராணி என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகனும், மீனா என்ற மகளும் உள்ளனர். விவசாயி தற்கொலைக்கான காரணம் குறித்துச் சுவாமிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் கொத்தங்குடியில் முகாமிட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: