uttarakhand-map_650x400_71433345098புதுடெல்லி, மார்ச் 27-

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாக அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரசில் இருந்து பா.ஜ.கா வில் சேர்ந்த எம். எல். ஏக்களை  அம்மாநில சபாநாயகர் கோவிந் சிங் குன்ஜ்வால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில்  முதலைமைச்சர் ஹரிஷ் ராவத் எம். எல். ஏக்களை விலைக்கு வாங்குவதாக கூறி வீடியோ ஆதாரம் ஓன்றை எம். எல். ஏ ஒருவர் வெளியிட்டார். இது உத்தரகாண்ட் அரசியலில் மேலும பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதலைமைச்சர் சபாநாயகரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இதற்கிடையில் அசாம் மாநிலத்தில் பிரச்சாரததை முடித்து தில்லி திரும்பிய  பிரதமர் நரேந்திரமோடி அமைச்சரவையை கூட்டி  அசாம் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இரண்டாவது நாளாக மீண்டும் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.