விருதுநகர், மார்ச். 27 :
உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.90 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சிவகாசியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (39). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு, கல்மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது வண்டியில் ரூ.90ஆயிரத்து 600 இருந்தது தெரியவந்தது. அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து, பறக்கும்படையினர் பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: